Post

Sex - Where it Starts?

Sex
Finding the way of Root
pic from - polyvore

01. பெண்கள் ஆபாசமாக ஆடை அணிவது தவிர்க்கப்பட வேண்டும்.
02. அங்கங்கள் தெரியும்படி ஆடை அணிவது பாலியல் உணர்வை தூண்டுகிறது.
03. முஸ்லீம் பெண்கள் அணியும் பர்தாவை எல்லோரும் அணிந்தால் பிரச்சினை வராது.

இப்படியாக பெண்களின் ஆடை சார்ந்து பல அறிவுபூர்வமான கருத்துக்கள் பேசப்பட்டதை பார்த்து விட்டு, நானும் சில வெள்ளையின நண்பர்களிடம் கருத்து கேட்டேன். (நான் தற்காலிகமாக பிரித்தானியாவில் வசிக்கிறேன்உங்களுக்கு தெரியும் நடுங்கும் குளிரிலும் பிருத்தானியப் பெண்கள் குறைந்தளவு துணிகளையே அணிவார்கள், இதுவே வெயில்காலம் என்றால் ஆடைகளை தேடித்தான் பார்க்க வேண்டும். )

நான் வேலை செய்யும் கடைக்கு வரும் ஒரு வெள்ளை இன நண்பன் பெரும்பாலான நேரங்களில் பாலியல் தொடர்பான பேசிக்கொண்டே இருப்பான். அனேகமாக அவன் கடைக்கு வரும் நேரங்களில் நாங்கள் ஓய்வாகவே இருப்போம். கதையை அவனே தொடங்குவான் எல்லாம் பேசுவான், சாராம்சம் பாலியல்தான்.

அவனிடம் மேற்சொன்ன விடயம் தொடர்பாக உரையாடலை தொடங்கினேன். அவர் உடனே என்னிடம் ஒரு கேள்வியை திருப்பி போட்டான் பெண்களின் மூக்கை பார்த்தவுடன் உனக்கு பாலுணர்வு தூண்டப்படுமா? என்று கேட்டான் . இல்லை என்றேன். கண் ?,இல்லை. காது?, இல்லை . கால்?, இல்லை. நான் தொடர்ந்து இல்லை, இல்லை என்றே சொல்லிக்கொண்டிருந்தேன்.

இப்போது தொடை?என்றான். இருக்கலாம் என்றேன். வயிறு....?இருக்கலாம்.

நீ இல்லையில் இருந்து இருக்கலாமுக்கு முன்னேறிவிட்டாய். என்று சிரிப்புடன் சொன்னான்.

இப்போது இதற்கு பதில் சொல்.

உனது அம்மாவின் தொடை? அம்மாவின் வயிறு?

உனது சகோதரியின் தொடை? சகோதரியின் வயிறு?

சிரித்தேன், பிரச்சினை உடையிலும் இல்லை உறுப்புகளிலும் இல்லை, உன்னில்தான். சொல்லிவிட்டு, தான் வாங்கிய பொருளுக்கு காசை தந்துவிட்டு புறப்பட்டுவிட்டான்.

Rajarednam Neminathan

கருத்து - http://on.fb.me/Ut8WJ6


Read more

Related Posts Plugin for WordPress, Blogger...

Author's Caricature Gallery

Tags

actor (1) bharati mani (1) caricature (1) caricaturist (2) credit (1) drama (1) facebook (4) facebooksrc (4) former (1) girl (1) girls (1) indian (1) like (1) poem (1) rape.woman (1) root (1) sex (1) share (1) social (1) source (1) staturs (1) sugumarje (2) writer (1)

Advertisements

Caricature from Photos
Gift Caricature, Wedding Caricature, Family Caricature and Live Caricature on Your Event, Party, Engagements.
3 Hours Non-Stop Live Avail
Rates: 100INR and 150 INR (Per Person)
www.caricaturelives.com
* Please, Do not ask for Company Events...